அது என்னுடைய அறிக்கை இல்லை, ஆனால் என் உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மையே! - ரஜினி

29 அக்டோபர் 2020, 08:52 PM

சமீபத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வாயிலாக ரஜினி அறிக்கை ஒன்று பரவி பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் இது குறித்து ரஜினி, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அக்டோபர் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கை, 


"என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் என்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.