"யாரடி நீ மோகினி" வில்லி நடிகைக்கு விரைவில் திருமணம்!

24 அக்டோபர் 2020, 07:33 AM

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக மிரட்டி வருபவர் சைத்ரா ரெட்டி. 

நாயகி போன்ற தோற்றத்தில் இருக்கும் அவர் சீரியலில் நாயகிக்கு எதிராக வில்லத்தனம் செய்தாலும் கூட, நிஜத்தில் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ஒளிப்பதிவாளர் ராகேஷ் என்பவரைத் தான் சைத்ரா ரெட்டி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.