மூடப்படும் விளிம்பில் கொல்கத்தா ஆய்வகம், நிதி நன்கொடை வழங்கிய நடிகர் கார்த்தி!

24 அக்டோபர் 2020, 07:29 AM

முனைவர் தேபால் தேப் என்ற வேளாண் விஞ்ஞானி நடத்தி வரும் பசுத ஆய்வகம் கொல்கத்தாவில் மிகவும் புகழ்பெற்றது.

இந்தியாவின் 1500க்கும் மேற்பட்ட நெல் வகைகளை பாதுகாப்பதில் இந்த ஆய்வகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆய்வகம் பாரம்பரிய நெல்லின் மரபணு பன்முகத்தன்மை, மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து பண்புகள் குறித்து உயிர்வேதியியல் மற்றும் மூலக்கூறு பகுப்பாய்வு மூலம் ஆராய்ச்சி செய்கின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாக, ஆய்வகத்தை இயக்குவதற்கான நிதி இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த இந்த ஆய்வகம் மூடப்படும் விளிம்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதை கேள்விப்பட்ட நடிகர் கார்த்தி, தனது உழவன் அறக்கட்டளையுடன் இணைந்து, ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் இயங்குவதற்காக தேவையான நிதியை நன்கொடையாக அளித்ததுள்ளார். ஆய்வகத்துக்கான நிதி திரட்டலையும் தொடங்கி வைத்துள்ளார்.