வரும் தீபாவளிக்கு வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்!

24 அக்டோபர் 2020, 07:25 AM

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். 

இந்தப் படத்தில் நடிப்பதற்காக விரதம் இருந்த நயன்தாரா என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது.

அவர் அம்மனாக நடிக்கும் படம் என்பதால், இப்படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

கொரோனா பிரச்சினை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ரிலீசுக்கு தயாரான படங்களை ஒவ்வொன்றாக ஓடிடியில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மூக்குத்தி அம்மனும் இணைந்துள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி உறுதி செய்துள்ளார். மூக்குத்தி அம்மன் தீபாவளி ஸ்பெஷலாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.