நடிகர்களுக்கு பெரும் சம்பளம் தருவதால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் - டி ராஜேந்தர்

24 அக்டோபர் 2020, 07:20 AM

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை, எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லுாரி வளாகத்தில் நவம்பர் 22ல் தேர்தல் நடக்கிறது. 

இந்த முறை முரளி ராமசாமி தலைமையிலான ஒரு அணியினரும், டி.ராஜேந்தர் தலைமையிலான ஒரு அணியினரும் களமிறங்கி உள்ளனர். இரண்டு அணிகளும் தங்களது உறுப்பினர்களுடன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுவை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், ''கோமா நிலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரவே களமிறங்கி உள்ளோம். நடிகர்களுக்கு பெரும் தொகை சம்பளமாக செல்வதால் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுகின்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.