கவுண்டமணி கோபம்!

23 அக்டோபர் 2020, 10:16 PM

80, 90களில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. 

தற்போது சினிமாவில்  நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார்.


அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாரோ சிலர் வதந்தி கிளப்பிவிட்டுள்ளார்கள். இந்த விஷயம் கவுண்டமணிக்கு தெரியவர கோபம் அடைந்துள்ளார். அடிக்கடி இப்படி ஏதாவது வதந்திகளைக் கிளப்புவதே சிலரது வேலையாக உள்ளது என வருத்தப்பட்டுள்ளார்.

அவர் வீட்டில் நலமாகவே இருக்கிறாராம். அடுத்து படம் ஒன்றில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறார் என்றும் தகவல். தன்னைப் பற்றி சிலர் இப்படி வதந்திகளைக் கிளப்புவதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்கள் என அவர் பாணியில் நக்கலடித்துள்ளார்.