பிரியாணி விருந்தளித்த நடிகர் மோகன்லால்! எதற்கு தெரியுமா?

23 அக்டோபர் 2020, 10:12 PM

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் த்ரிஷ்யம். 

மலையாள சினிமாவில் முதன்முதலாக 50 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையைப் பெற்ற இந்த படம், கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஏழு வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அனுமதித்த சுகாதார அறிவுறுத்தல்களின்படி தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது படக்குழுவினருக்கு, படத்தின் ஹீரோ மோகன்லால் பிரியாணி விருந்து அளித்து அசத்தியுள்ளார். இதுகுறித்து நடிகை மீனா மற்றும் இவர்களின் மகள்களாக நடிக்கும் அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் ஆகியோர் தங்கள் சோஷியல் மீடியா பக்கங்களில் குறிப்பிட்டுள்ளதுடன், அருமையான பிரியாணி விருந்து அளிப்பதற்காக மோகன்லாலுக்கு தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.