வலிமை படத்தில் தீம் மியூசிக், யுவனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!

23 அக்டோபர் 2020, 10:03 PM

அஜித் தற்போது வினோத்திற்கும் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தின் 60-வது படம் திரைப்படமான இத்திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படம் குறித்த ருசீகர தகவலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ‘நேர் கொண்ட பார்வை’ படத்திற்கு இசையமைக்கும் போதே அஜித் எனக்கு போன் செய்து பில்லா, பில்லா-2, மங்காத்தா என்று நிறைய தீம் மியூசிக் கிட்டார் வைத்து பண்ணி விட்டோம். ஆனால் ‘வலிமை’ படத்தில் கிட்டார் இல்லாமல் தீம் மியூசிக் அமைக்க முயற்சி செய்யுங்கள்’என்று அறிவுரை கூறினார்

அவர் சொன்னதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, கிட்டார் பயன்படுத்தாமல் ‘வலிமை’ படத்தில் தீம் மியூசிக்கை உருவாக்கி இருக்கிறேன். இதுவரை மூன்று பாடல்கள் முடிந்துவிட்டது. ஒரு சின்ன தீம் மியூசிக்கும் முடிந்துவிட்டதாக யுவன் கூறியுள்ளார்.