450 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்!

23 அக்டோபர் 2020, 09:58 AM

ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் ராம்சரணின் முதல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, நேற்று ஜூனியர் என்.டி.ஆரின் படத்தை வெளியிட்டனர். 

இப்படம், சுதந்திர போராட்ட வீரர்களான, அல்லுாரி சீதாராமராஜு மற்றும் கொமாரம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ளது.

ஹைதராபாத்தில் படுவேகமாக நடந்து வருகிறது திரைப்படத்தின் படப்பிடிப்பு.

அடுத்த மாதம் நடக்கும் படப்பிடிப்பில், ஆலியா பட் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. படத்தில், அஜய்தேவ்கன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இப்படம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது. மொத்தம், 450 கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாக உருவாக்கப்படுகிறது.