மறைந்த தன் கணவர் சிரஞ்சீவி சார்ஜாவை எண்ணி உருகிய மேக்னா ராஜ்!

18 அக்டோபர் 2020, 09:04 AM

கன்னட திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர்  சிரஞ்சீவி சார்ஜா. இவரது மனைவி மேக்னா ராஜ். இவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் மேக்னா ராஜை நிலைகுலைய வைத்தது.

சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து நடிகை மேக்னாராஜிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிரஞ்சீவி சர்ஜா, மேக்னா ராஜின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் பேனர், மேக்னா ராஜ் அமர்ந்திருந்த நாற்காலி அருகே வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் பிறந்தநாள் அன்று, அவருடைய புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்  கூறி உருக்கமாக பதிவிட்டிருந்தார் நடிகை மேக்னா ராஜ்.