மக்களிடையே சர்ச்சையாகி வரும் "800" படம் குறித்து பார்த்திபன் பதிவிட்ட ட்விட்!

17 அக்டோபர் 2020, 08:58 PM

800 என்ற பெயரில் தயாராகும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு சில தினங்களாக வலுத்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியுள்ளதாவது:

“முத்தையா முரளியின் சூழல் பந்தை, ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி. எதிர்ப்புகள், -எதிர்பார்ப்புகளாக bounce ஆகிவரும் பந்தினை லாவகமாக அடித்து boundary-யைத் தாண்டி சிக்சராக விளாசி (அதாகப்பட்டது தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என) ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் cheers girls போல ஆடவைத்து ஆரவாரத்துடன் 'தமிழ்மக்கள் செல்வந்தர் ஆகிவிடும் வியூகமோ? என்பதென் யூகம்! (காலங்காத்தால...) நடப்பது நன்மையே. so நன்மையே நடக்கும் என நம்புவோம்!” என இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.