இணையத்தை கலக்கும் நாகர்ஜுனாவின் ‘பங்காராஜு’ ட்ரைலர்...

13 ஜனவரி 2022, 03:46 PM

2016ல் கல்யாண் கிருஷ்ண குரசலா இயக்கத்தில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் ‘சோகடே சின்னி நாராயணா’. 

https://www.youtube.com/watch?v=AF4j7c2z_sM

இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த நாகார்ஜூனா ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும், இன்னொரு நாயகியாக லாவன்யா திரிப்பாதியும் நடித்திருந்தனர். டோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாவது பார்ட்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. நாகார்ஜுனா அவரின் அன்னபூர்னா ஸ்டூடியோஸ் மூலமாக இந்த படத்தை தயாரிக்கிறார், ‘பங்காராஜு’ என டைட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் இதில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கிறார், முதல் பார்ட்டின் ஹீரோயின் ரம்யா கிருஷ்ணனும் இந்த படத்தில் முக்கிய கேர்கடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், மேலும் இந்த படத்தில் நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவங்களோடு சேர்ந்து சலபதி ராவ், ராவ் ரமேஷ், பிரம்மாஜி, வென்னெலா கிஷோர் மற்றும் ஜான்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் ப்ரொமோஷனுக்காக வெளியிடப்பட்ட டீஸர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. யூட்யூப் ட்ர்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ள இந்த ட்ரைலர் 9 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. நாளை படம் திரைக்கு வரவுள்ளது.