பொங்கலுக்கு அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்ட ‘வலிமை’ படக்குழு...

12 ஜனவரி 2022, 07:00 PM

அஜித் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிருக்கும் திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருந்து வரும் இந்த படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். 

பொங்கலுக்கு திரைக்கு வரும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த படம் கொரோனா 3ஆம் அலை காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

அஜித்திற்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க ஹூமா குரோஷி, யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். பொங்கல் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் பெரிதும் வருத்தத்தில் இருப்பதால் பொங்கல் தினத்தில் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.