சிம்புவை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் இளம் நடிகை...

12 ஜனவரி 2022, 06:58 PM

தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் இயக்குநர் சசி. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 இதனையடுத்து இவர் இயக்கத்தில் அடுத்து ஒரு காதல் கதை திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

அவருக்கு ஜோடியாக தற்போது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துவரும் சிட்தி இட்னானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

சிட்தியின் முதல் தமிழ் திரைப்படமே திரைக்கு வராத நிலையில் அவர் மற்றொரு படத்தில் ஒப்பந்தமாகிருப்பது அவரின் நடிப்பின் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ’நூறு கோடி வானவில்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மாதவ் மீடியா மற்றும் பாலாஜி கபா இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கவுள்ளார்.