பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘ஹே சினாமிகா’ முதல் சிங்கிள்...

12 ஜனவரி 2022, 06:55 PM

1987ல் துணை நடன இயகுநராக சினிமா துறையில் அறிமுகமாகி ஆறு ஆண்டுகள் துணை நடன இயக்குநராகவே இருந்து 1995ல் வெளியான ‘நம்மவர்’ படத்தில் நடித்தவர் பின்னர் 2003ல் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி

 பெரும் வெற்றியடைந்த ‘காக்க காக்க’ படத்திற்கு நடன இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியவர் தான் பிருந்தா. ஃபிலிம் ஃபேர், தமிழ்நாடு ஸ்டேட், கேரளா ஸ்டேட் அவார்ட் என பல விருதுகளை வென்ற இவர் தற்போது இயக்குநராகவும் உருவெடுக்க உள்ளார். ‘ஹே சினாமிகா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகனாக பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார். இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் இந்த படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகிகளாக காஜல் அகர்வாலும், அதிதிராவும் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகிய நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பொங்கல் தின ஸ்பெஷலாக வரும் 14ஆம் தேதி வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.