ஏமாற்றிய முக்கிய படங்கள்..! பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய முக்கிய படங்கள்

08 ஜனவரி 2022, 07:04 PM

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்திருக்கும்  ‘வலிமை’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு சொல்லித் தெரியவேண்டியது இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த காலமெல்லாம் முடிவுக்கு வந்து படத்தின் ட்ரைலர், பாடல்கள், போட்டோக்கள் என அனைத்தும் வெளியாகிவிட்டது. 

படமும் இந்த 13ஆம் தேதி திரைக்கு வரும் என மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இந்த கொரோனா 3ஆம் அலை சிக்கலாக அமைந்துள்ளது. ஏற்கனவே ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து வலிமை படத்தின் ரிலீஸும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கலை வலிமை படத்தோடு கொண்டாட காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சினிமா பிரியர்களுக்கும் இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. முன்னதாக படத்தை பார்த்த சென்சார் டீம் படத்துக்கு 15 கட்கள் சொல்லி ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்து படத்தை வெளியிட அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.