மீண்டும் கோலிவுட்டில் பேசுபொருளாகும் வேலு ராமமூர்த்தியின் ‘குற்றப்பரம்பரை

03 டிசம்பர் 2021, 04:08 PM

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் பாரதிராஜா அவரின் வாழ்நாள் கனவு படமான ‘குற்றப்பரம்பரை’ படத்தை இயக்க போவதாக அறிவித்தார். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில வாரங்களிலே இயக்குநர் பாலாவும் அதே கதையை படமாக்க போவதாக அறிவித்தது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அறிக்கைகள் வாயிலாக ஒருவர் குறித்து ஒருவர் பேசிக்கொண்டனர். இந்த கருத்து மோதல் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து இருவருமே அந்த கதை குறித்து பேசுவதை தவிர்த்தனர். தற்போது வேலு ராமமூர்த்தியின் அந்த ‘குற்றப்பரம்பரை’ கதை படமாக்க இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தை சசிகுமார் இயக்கி அவரே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குறிய இந்த கதை விரைவில் திரைப்படமாகவும் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.