விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் புதிய படம்

03 டிசம்பர் 2021, 04:07 PM

பா.இரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார் என தகவல்கள் இணையத்தில் வைரலானது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படம் தற்சமயம்  ‘சீயான் 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு பின் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த படம் அதற்கு முன்னதாகவே துவங்குவதால் விக்ரம் ரசிகர்களிடையே முகுந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது. விக்ரமிற்கு அடுத்தடுத்து கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் என படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் படத்திற்கு படம் அவரின் மார்கெட் மேலும் உயரும் என்கிற எதிர்ப்பார்ப்பும் நிலவுகிறது. இதன் காரணமாக தான் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.