தனுஷின் அடுத்த பாலிவுட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா..?

24 நவம்பர் 2021, 11:18 PM

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கி முடித்துள்ள ‘மாறன்’ மற்றும் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும்  ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘நானே வருவேன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 இதனிடையே அவர் நடித்து முடித்துள்ள பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனந்த் எல் ராய் இயக்கிருக்கும் இந்த படத்தில் தனுஷுடன் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் படத்தை நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 24ஆம் தேதி படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.