நாக சைதன்யா பிறந்தநாளை ‘பங்காராஜு’ டீஸரோடு கொண்டாடிய படக்குழு

24 நவம்பர் 2021, 10:49 PM

2016ல் கல்யாண் கிருஷ்ண குரசலா இயக்கத்தில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் ‘சோகடே சின்னி நாராயணா’. 


இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த நாகார்ஜூனா ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும், இன்னொரு நாயகியாக லாவன்யா திரிப்பாதியும் நடித்திருந்தனர். டோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாவது பார்ட்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. நாகார்ஜுனா அவரின் அன்னபூர்னா ஸ்டூடியோஸ் மூலமாக இந்த படத்தை தயாரிக்கிறார், ‘பங்காராஜு’ என டைட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் இதில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கிறார், முதல் பார்ட்டின் ஹீரோயின் ரம்யா கிருஷ்ணனும் இந்த படத்தில் முக்கிய கேர்கடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், மேலும் இந்த படத்தில் நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவங்களோடு சேர்ந்து சலபதி ராவ், ராவ் ரமேஷ், பிரம்மாஜி, வென்னெலா கிஷோர் மற்றும் ஜான்சி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நாக சைதன்யாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக படத்தின் டீஸரை தற்போது வெளியிட்டுள்ளனர். முன்னதாக நாக சைதன்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தனர்.