நாளை வெளியாகவிருக்கும் ‘கடைசி விவசாயி’ படத்தின் ட்ரைலர்.

22 நவம்பர் 2021, 10:18 PM

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு காத்திருக்கும் திரைப்படம் தான் ‘கடைசி விவசாயி’. விஜய் சேதுபதி முன்னணி கதாப்பத்திரத்திரல் நடித்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 

ஒரு கிராமத்தையும் அதிலிருக்கும் விவாசியிகளையும் மையமாகவைத்து எதார்த்தமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகிருந்த நிலையில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். தியேட்டர் அல்லது ஓடிடி என எதிலாவது படம் வெளியாகாத என ரசிகர்கள் ஏங்கிய நிலையில் படம் நேரடியாக சோனி லிவ் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின, தற்போது படத்தின் புதிய ட்ரைலர் ஒன்றை நாளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.