கன்னட சூப்பர் ஸ்டார் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் சல்மான் கான்...

14 அக்டோபர் 2021, 01:14 PM

பாலிவுட் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான். இவரின் படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் படங்களே. சமீப காலங்களாக இவர் நடித்து வெளியான படங்கள் வரிசையாக 100 கோடி வசூலை கடந்து சாதனை படத்து வந்தது. 

இதனால் இவரை வைத்து படமியக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தனர். ஆனால், கடைசியாக பிரபு தேவா இயக்கத்தில் இவர் நடித்து வெளியான ‘ராதே’ படம் படுதோல்வி அடைந்தது. இதனால் அடுத்து ஒரு சூப்பர் ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என தீர்மானமாக உள்ளார் சல்மான். தற்போது இவர் நடிப்பில் ‘ஆண்டிம் : தி ஃபைனல் ட்ரூத்’, ‘பதான்’, ‘டைகர் 3’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதனை அடுத்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதிப் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான கிச்சா அங்கு சில படங்களையும் இயக்கியும் உள்ளார், மேலும் தபாங் 3 படத்தில் சல்மானோடு இணைந்து நடித்த போது ஏற்பட்ட நட்பின் காரணமாக இந்த படத்தில் இவர்கள் இணைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.