சிவகார்த்திகேயன் படத்தால் 2 படங்களுக்கு வந்த சிக்கல்...

14 அக்டோபர் 2021, 12:34 PM

கடந்த வாரம் திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

இதனிடையே இன்று சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, விவேக், யோகிபாபு, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்‌ஷி என பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அரண்மனை 3’ படத்திற்கும் போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுவிட்டதால் இன்று ரிலீஸ் அறிவித்திருந்த சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ அதர்வாவின் ‘தள்ளிப்போகாதே’ ஆகிய படங்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இந்த இரு படங்களின் ரிலீஸும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு காத்திருக்கும் இந்த படங்களின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது பட தயாரிப்பாளர்களுக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.