‘அல வைக்குந்த புரமலோ’ ஹிந்தி ரீமேக் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...

13 அக்டோபர் 2021, 08:29 PM

தெலுங்கு திரையுலகில் இந்த ஆண்டு பொங்கல் விடுமுறை தினத்தை குறிவைத்து வெளியான திரைப்படம் தான் ‘அல வைகுந்த புரமலோ’. இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உருவாகிருந்த இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இதில் இடம் பெற்றிருந்த புட்ட பொம்மா பாடல் இந்திய அளவில் ட்ரெண்டாகி படத்திற்கு மிகப்பெரும் ப்ரோமோஷாக இருந்தது.  பணக்கார வீட்டில் பிறக்கும் அல்லு அர்ஜுன் விதி வசத்தால் ஏழை ஒருவரின் வீட்டுக்கு மருத்துவமனையிலே மாற்றப்பட 25 ஆண்டுகள் கழித்து தன் தாய் தந்தையரைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களோடு எப்படி சேர்கிறார் என்பது தான் கதை. படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதனை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகளும் தீவிரமாக நடைப்பெறுகிறது. ‘Shehzada’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கேரக்டரில் ஆர்யன் கார்த்திக் நடிக்க பூஜா ஹெக்டே கேரக்டரில் க்ரித்தி சனோன் நடிக்கிறார். மேலும் மனிஷா கொய்ராலா, பரேஷ் ராவல், ரோனித் போஸ் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர். படத்தை 2022ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.