தனது சூப்பர் ஹிட் ஹாரர் படத்தின் பார்ட் 2 குறித்து பேசிய மிலிந்த் ராவ்...

13 அக்டோபர் 2021, 08:25 PM

நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் கோலிவுட்டிற்கு இயக்குனராக அறிமுகமானது சித்தார்த் நடிப்பில் வெளியான ‘அவள்’ படத்தில் தான். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களில் அவள் திரைப்படம் முற்றிலும் மாறுபட்டு முழு நீள ஹாரர் படமாக அமைந்திருந்தது. ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு வர வைக்கும் படியான பல காட்சிகள் அவள் படத்தில் இடம் பெற்றிருந்தது. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்திருந்தார். படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், சித்தார்த் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகவே இந்த படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மிலிந்த் ராவ் ‘அவள் 2’ நிச்சயம் நடக்கும், சித்தார்த் தனது பட வேலைகளை முடித்ததும் இது குறித்து கலந்து பேச உள்ளோம், படத்திற்கான ஒன் லைன் தயாராக உள்ளது எனவும் கூறியுள்ளார். இவர் தற்போது அமெசான் ப்ரைம் தளத்திற்காக ‘தி வில்லேஜ்’ எனும் நாவலை வெப் சீரிஸாக கொடுக்க திட்டமிட்டு அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை கவணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.