‘டான்’ படத்தில் நடித்து முடித்த எஸ்.ஜே. சூர்யா

12 அக்டோபர் 2021, 10:28 PM

‘டாக்டர்’ படத்தை முடித்த கையோடு சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத பட வேலைகளில் பிஸியானார், கூடவே லைகா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை அட்லியின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். 

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். கூடவே எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், சிவாங்கி என பல பேர் நடிக்கின்றனர். இதில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவடைந்ததை அடுத்து டப்பிங் பணிகளை சமீபத்தில் துவங்கிருந்தது படக்குழு, முதற்கட்டமாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது டப்பிங்கை பேசிருந்தார். இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி டிவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை இட்டு, நடிகர் S.J. சூர்யா, தான் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் நடித்து முடித்துவிட்டதாக  ட்விட் செய்து அறிவித்துள்ளார். விரைவில் எஸ்.ஜே.சூர்யாவின் தனது டப்பிங்கை துவங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.