நாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதையில் நடித்துமுடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத்

12 அக்டோபர் 2021, 10:26 PM

கன்னட சினிமாவில் வெளியான ‘யு டர்ன்’ படம் மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழிலும் நல்ல நல்ல ஹிட் படங்களில் நடித்து இங்கும் முன்னணி நடிகைக்கான இடத்தை தக்கவைத்துள்ள இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மாறா’. மாதவன், ஷ்ரத்தா முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் அமெசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

 இதனையடுத்து ஷ்ரத்தா நாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதையில் நடித்து முடித்துள்ளார். ‘கலியுகம்’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை விளம்பர படங்களை இயக்கிய பிரமோத் சுந்தர் இயக்கியுள்ளார். தனது முதல் படமான இதை நாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதையாக பிரமோத் படமாக்கியுள்ளார். ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்ததை தொடர்ந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகளை படக்குழு கவணித்து வருகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.