பவன் கல்யானின் பிரம்மாண்ட படத்தில் இணையும் முன்னணி நடிகை...

17 செப்டம்பர் 2021, 02:25 PM

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. தற்போது இவர் கைவசம் ‘மோஸ்ட் எளிஜிபில் பேச்சுலர்’, ‘ஆச்சார்யா’, ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் தெலுங்கிலும் ‘சர்கஸ்’ எனும் படம் இந்தியிலும் தமிழில் விஜய்யின் ‘பிஸ்ட்’ படமும் உருவாகிவருகிறது. 

பிஸியாக பல படங்களில் நடித்து வருகின்ற இவர் தெலுங்கில் மேலும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவன் கல்யான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் படம் ‘பவவீயுடு பகத் சிங்’.

 இதில் நாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகிருந்த நிலையில் அவரின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக பூஜா ஹெக்டேவை இதில் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது