‘சந்திரமுகி 2’-ல் வடிவேலு நிச்சயம் இருப்பார்..! இயக்குனரின் அதிரடி பதில்...

17 செப்டம்பர் 2021, 02:24 PM

2005ல் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரவு, நாசர், நயன்தாரா, ஜோதிகா, மாளவிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சந்திரமுகி’. நல்ல கமர்ஷியல் ஹாரர் படமாக வெளியாகிருந்த இந்த படம் கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் திரையில் ஓடி சாதனை படைத்திருந்தது. 

இதன் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக இயக்குனர் வாசு கடந்த ஆண்டு அறிவித்தார், அதில் ரஜினிக்கு பதிலாக அவரின் தீவிர ரசிகர் ராகவா லாரண்ஸ் நடிக்க உள்ளார் எனவும் செய்திகள் உறுதியானது. அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இதனிடையே ‘சந்திரமுகி 2’ படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிப்பதாக தகவல் பரவியது. அதற்கு இயக்குனர் பி.வாசு “சந்திரமுகி 2-ம் பாகத்துக்கான கதை, திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சிக்கான இணைப்பு சரியாக அமைய வேண்டும் என்பதால் அவசரப்படாமல் வேலை செய்கிறோம். விரைவில் இந்த பணிகள் முடிவடையும் செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். சந்திரமுகி படத்தில் நடித்தவர்கள் 2-ம் பாகத்தில் கிடையாது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் உண்மை இல்லை. என தனது முடிவை தீர்மானமாக கூறினார். அதனை தொடர்ந்து இந்த பார்ட்டில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் பரவியது, இதற்கும் இயக்குனர் வாசு பதிலளித்துள்ளார், அதன்படி  சந்திரமுகி 2ல் வடிவேலு  நிச்சயம் இருப்பார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என பதிலளித்துள்ளார். முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் காமெடி முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.