‘நாய் சேகர்’ தலைப்பு வடிவேலுக்கு கிடையாது..! போஸ்டர் வெளியிட்ட படக்குழு...

17 செப்டம்பர் 2021, 02:23 PM

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒருவர் நம் வைகை புயல் வடிவேலு. இவரின் ரெட் கார்ட் பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். 

இவரின் ரீ எண்ட்ரி படமாக லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்திற்கு ‘நாய் சேகர்’ என தலைப்பு அறிவித்திருந்தனர். ஆனால் அதே தலைப்பில் சதிஷ் மற்றும் குக்வித் கோமாளி பவித்ரா நடிப்பில் படம் உருவாகியுள்ளது. அவர்களின் கதைப்படி ஒரு நாய்க்கு அதிக முக்கியதுவம் இருப்பதால் இந்த தலைப்பு நிச்சயம் வேண்டும் என அவர்கள் முறையிட்டு வந்தனர். 

80 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இவர்கள் டைட்டிலை மாற்றுவது என்பது சிக்கலான விஷயம் தான் என்பதால், நாய் சேகர் தலைப்பு தங்களுக்கே வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்த இவர்கள் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த தலைப்பு சதிஷுக்கு மட்டுமே வடிவேலுக்கு கிடையாது என  பதிலளித்துவிட்டனர். தற்போது வடிவேலு படத்துக்கு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதனால் வடிவேலு நடிக்கும் படத்துக்கு ‘மீண்டும் நாய்சேகர்’, ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என இவற்றுள் ஏதாவது ஒரு தலைப்பை வைக்க ஆலோசித்து வருகிறார்களாம்.