சீனாவை தொடர்ந்து இந்தோனேசியாவில் ரீமேக்காகும் மோகன்லால் படம்...

17 செப்டம்பர் 2021, 02:21 PM

மலையாள சினிமாவில் உருவாகும் படங்கள் சமீபகாலமாக உலகளவில் கவணமீர்க்கப்பட்டு. அந்த வகையில் 2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெருமளவில் கவணமீர்த்த படம் ‘த்ரிஷ்யம்’. திரைப்படங்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் மோகன்லால் தன் மகள் செய்த கொலையை எந்த தடையமும் சிக்காதவாரு எப்படி மறைக்கிறார் என்பது தான் இந்த படத்தின் ஒன்லைன். 

https://www.instagram.com/p/CT4qD6yIk2H/?utm_source=ig_web_copy_link

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்த படத்தினை பல மொழிகளிலும் ரீமேக் செய்தனர். அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது, தற்போது இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டடித்துள்ளது இதன் ரீமேக் உரிமையும் நல்ல முறையில் வியாபாரமாகி தெலுங்கில் முழு படத்தின் ஷூட்டிங் வேலைகளும் முடிந்தே விட்டது. இப்படி இருக்க இந்த படத்தின் சைனீஸ் வெர்ஷனில் முதல் பாகத்திலே ஹீரோ போலிஸிடம் உண்மை சொல்லி தண்டனையை அனுபவிப்பது போல க்ளைமாக்ஸ்  கொடுத்துள்ளார் இயக்குனர் சாம் க்வாஷ். இதற்கு காரணம் சீனாவில் அப்படி படம் எடுக்கக்கூடாது என ஒரு கண்டிஷன் உள்ளதாம். அவர்கள் குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதை கடைப்பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக குற்றவாளிகள் தப்பிப்பது போன்ற படங்களை அங்கே அனுமதிப்பது கிடையாது, மீறி அதுபோன்ற படங்களை கொடுத்தால் படத்தின் இயக்குனருக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும், இதனால் த்ரிஷ்யம் படத்தை ஒரே பாகத்தில் முடித்துவிட்டார் இயக்குனர் சாம் க்வாஷ்.  இந்த நிலையில் திரிஷ்யம் முதல் பாகத்தை இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த தகவலை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் வெளிப்படுத்தியுள்ளார். இது இந்தோனேஷியாவில் ரீமேக் செய்யப்படும் முதல் மலையாளப்படம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.