வேல்ஸ் ஃபிலிம் நிறுவனத்தோடு மீண்டும் இணையும் சிம்பு...

17 செப்டம்பர் 2021, 02:20 PM

கோலிவுட்டில் இருக்கும் நல்ல கமர்ஷியல் இயக்குனர்களில் இயக்குனர் கோகுல் மிக முக்கியமானவர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஜுங்கா’ மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான ‘காஷ்மோரா’ ஆகிய படங்களை கமர்ஷியலாக வெற்றிப்படங்களாக்கிய இவர் இயக்கத்தில் தற்போது உருவாகவிருக்கும் படம் ‘கொரோனா குமார்’. 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ப்-அடத்தின் ஸ்பின் ஆஃப் வெர்ஷன் என சொல்லப்படும் இந்த கதையில் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது, பின்னர் சந்தானம் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது சிம்பு ஹீரோவாக வைத்து படத்தை துவங்க உள்ளது படக்குழு. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகவிருக்கும்  இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவின் 48வது படமான இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வேல்ஸ் ஃபிலிம் நிறுவனம் இன்று வெளியிடுகிறது. சிம்பு எதிர்ப்பார்த்து காத்திருக்கும் முழு நீள காமெடி கமர்ஷியல் படமாக இது அமையும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.