ஆயுதப்பூஜை விடுமுறையை குறிவைக்கும் ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’...

17 செப்டம்பர் 2021, 02:19 PM

சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடிப்பில், ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகி வரும் படம் 'உடன்பிறப்பே'. இயக்குனர் இரா.சரவணன் இயக்கி வரும் இந்த படத்தின் சில ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகியது.

 அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடித்துள்ளார். மேலும் சூரி, சமுத்திரக்கனி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் சூர்யா தனது ப்ரோடக்‌ஷனில் உருவாகி வரும் படங்களின் ஓடிடி ரிலீஸை கன்ஃபார்ம் செய்திருந்தார். 

அப்போது இந்த படத்தை பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார், அதுப்படி இந்த படம் வரும் அக்டோபரில் நேரடியாக அமெசான் ப்ரைமில் வெளியாக இருப்பதாக உறுதி செய்திருந்தார். தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது ‘உடன்பிறப்பே’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி ஆயுதபூஜை பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே தேதியில் விஷால் மற்றும் ஆர்யா நடித்திருக்கும் ‘எனிமி’, சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் ‘அரண்மனை 3’ ஆகிய படங்களும் வெளியாக இருப்பதால் ஆயுதப்பூஜை விடுமுறை கோலிவுட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.