அல்போன்ஸ் புத்திரன் படத்தில் இணைந்த அஜ்மல்...

16 செப்டம்பர் 2021, 03:54 PM

அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் ‘நெற்றிக்கண்’. விக்னேஷ் சிவன் தயாரித்திருந்த இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. இதில் நடிகை நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார்.

 நயன்தாராவிற்கு வில்லனாக அஜ்மல் அமீர் நடித்திருந்தார். நயன்தாராவை காட்டிலும் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் வந்த அஜ்மலுக்கு அதிகப்படியான வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்வி ராஜ் ஜோடியாக நடிக்கவுள்ளார். ‘கோல்ட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் அண்மையில் கேரளாவில் பூஜையோடு துவங்கியது. பிரித்விராஜ் தயாரித்து நடிக்கவிருக்கும் இந்த படத்தை மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜ்மல் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக பரவலாக கூறப்பட்டுவந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது, இதில் அஜ்மலுக்கு வில்லன் கதாப்பாத்திரம் என்கிறது மலையாள திரையுலகம்.