‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

16 செப்டம்பர் 2021, 03:53 PM

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின்படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரைலரை நேற்று நடிகர் சூர்யா வெளியிட்டார். எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இது குறித்து தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா பேசுகையில்,' ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தை பார்வையாளர்களுக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எளிய மனிதர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் நகைச்சுவையுடன் கூடிய மனித நேய உணர்வு சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக நாங்கள் அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.