தனுஷ் பட இயக்குனரின் ‘லவ் ஸ்டோரி’ ட்ரைலர் வெளியானது...

13 செப்டம்பர் 2021, 05:28 PM

 டோலிவுட் முன்னணி நடிகர் நாக சைதன்யா நடிப்பில் அடுத்து ரிலிஸுக்கு தயாராகிருக்கும் படம் ‘லவ் ஸ்டோரி’. நாக சைதன்யா ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கும் இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்களும் டீஸரும் போஸ்டரும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

https://youtu.be/1yH_eOxpkwo

 குறிப்பாக ‘சாரங்க தரியா’ பாடல் தெலுங்கு ரசிகர்களை தாண்டி இந்தியா முழுவதும் ஹிட்டடித்தது. இதில் சாய் பல்லவியின் நடனம் பெரியளவில் பேசப்பட்டது. ரொமன்டிக் டிராமா வகையில் உருவாகியுள்ள இந்த படத்தின் வெளியீடு  செப்டெம்பர் மாதம் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷால திரையரங்குகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தியேட்டர் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

இதனால் வெளியீட்டு தேதியை மீண்டும் செப்டெம்பர் மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது படக்குழு. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை இன்று(13.09.2021) படக்குழு வெளியிட்டுள்ளது.  படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தக்கவைத்துள்ளது. இந்த படத்தில் ரேவந்த் என்ற பாத்திரத்தில் நாக சைதன்யாவும், மவுனிகா என்ற பாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். கிராமத்தில் இருந்து நகரத்தில் முடியும் கதைக்களத்துடன் லவ் ஸ்டோரி படம் உருவாகியுள்ளது.