‘அரண்மனை 3’ படத்தின் அடுத்த சிங்கிள் வெளியானது...

13 செப்டம்பர் 2021, 12:36 PM

ஒரு பக்கம் ராகவா லாரன்ஸ் காஞ்சனா சீரிஸ் ஹாரர் படங்களை கொடுப்பது போல் சுந்தர். சி அரண்மனை சீரிஸ் ஹாரர் படங்களை கொடுத்து

https://www.youtube.com/watch?v=UT3_k2I9qDU

வருகிறார். அரண்மனை பட வரிசைகளின் மூன்றாவது பாகம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சுந்தர். சி இயக்கி நடிக்கும் இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்க நாயகிகளாக ஆண்டிரியா, ராஷி கண்ணா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றன. இதற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து முடிந்துள்ள நிலையில் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி வைரலான படத்தின் ப்ரோமோஷனுக்காக முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் "Rasavaachiye" சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.