ஆக்‌ஷன் கதையில் கல்லூரி மாணவனாக நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்..

13 செப்டம்பர் 2021, 12:30 PM

கோலிவுட்டின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று வெற்றிமாறன் - ஜி.வி பிரகாஷ். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி இதுவரை வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் ரகம் தான்.

 இதுவரை வெற்றிமாறன் படங்களுக்கு இசையமைத்து வந்த ஜி.வி. பிரகாஷ் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து தமிழ் சினிமாவின் பிஸியான ஹீரோவாக இருந்து வருகிறார். தற்போது இவரின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இவரின் ஃபேவரட் இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் என்பவர் இயக்குகிறார்.

 ‘செல்ஃபி’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜி.வியுடன் சேர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன் கலந்து திரைக்கதை வடிவம் கொடுத்துள்ளார் மதிமாறன். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வைரலாகி வருகிறது.