தளபதி 65 பூஜையில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலம்!

01 ஏப்ரல் 2021, 01:09 PM

விஜய் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கும் தளபதி 65 படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த பூஜை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே ’தளபதி 65’ பட பூஜை நடந்ததை உறுதி செய்து உள்ளார்.

இந்நிலையில் இந்த பூஜையில் பிக்பாஸ் மூலமாக பிரபலமான நடிகர் கவினும் கலந்துகொண்டார். இதனால் அவர் படத்தில் ஏதாவது ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்றும் நெல்சனின் நெருங்கிய நண்பரான விடிவி கணேஷும் கலந்துகொண்டார்.