படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் மருத்துவமனையில் பிரபல நடிகர்- சோகம் அளிக்கும் புகைப்படம்

31 மார்ச் 2021, 12:04 PM

எந்த ஒரு வேடம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து அசத்துபவர் நடிகர் ஆதித்ய மேனன். இவர் தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் ஹரி ஹரா வீரா மல்லு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ஹைதராபாத்தில் நடக்கும் இப்படப்பிடிப்பில் அண்மையில் ஆதித்ய மேனன் கலந்து கொண்டிருக்கிறார். படத்தில் குதிரை மீது சவாரி செய்யும் போது ஆதித்ய மேனன் கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு பயங்கர விபத்து ஏற்பட ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சில சிகிச்சைக்கு பிறகு அவர் தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.