சிவகார்த்திகேயன் பட வில்லன் நடிகர் விபத்தில் சிக்கினார்

04 மார்ச் 2021, 12:39 PM

சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் என்ற படத்தில் வில்லனாக நடித்தவர் பகத் பாசில் இவர் இன்று ஷூட்டிங்கில் ஈடுபட்டபோது, அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

மலையாள சினிமாவில் இயக்குநர் பாசிலின் மகன் பகத் பாசில்., இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர்  நடிகை நஸ்ரியாவின் கணவர் ஆவார்.

தற்போது இவர்  சஜிமோன் இயக்கத்தில் மலையன் குஞ்சு என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் இப்படத்தில்  வீடு நீரில் மூழ்குவதுபோன்ற ஒரு காட்சிக்காக செட்டிங் போடப்பட்டது. அந்த வீட்டிலிருந்து பகத் பாசில் கீழே விழுவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. இதில் எதிர்பாரத விதமாக அவர் கீழே விழுந்தபோது, அவருக்கு மூக்கில் அடிப்பட்டது. பின்னர் அவர் எர்ணாகுளம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கும்படி கூறியுள்ளனர்