சில மனிதர்களைப் பார்த்தால் பயமாகவுள்ளது - விஷ்ணுவிஷால்

04 மார்ச் 2021, 12:38 PM

தமிழ் திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் முதன்முறையாக ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இயக்கும் திரைப்படம் காடன். தமிழில் காடன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் இந்தியில் “ஹாத்தி மெரெ சாத்தி” தெலுங்கில் “ஆரண்யா” என்ற பெயர்களில் வெளியாகிறது.

 

மூன்று மொழிகளிலும் ராணா டகுபதி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு வெர்சன்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இந்த படம் மூன்று மொழிகளிலும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டிரெயிலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

 இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட  நடிகர் ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஷ்ணு விஷால்,  படத்தில் யானையுடன் இணைந்து முதன் முதலில் நடிக்கும்போடு பயன் இருந்தது. கடைசி மூன்று ஆண்டுகளாக என் வாழ்க்கையில் நடக்கின்றதைப் பார்க்கின்ற போது, சில மனிதர்களைப் பார்த்துத்தான் பயப்பட வேண்டுமெனப் புரிந்துகொண்டேன். யானைகள் பாசமாக உள்ளது. ஆனால் மனிதர்கள் அவ்விதம் இல்லை . இதை என் அனுபவத்தில் கூறுகிறேன் எனக் கூறியுள்ளார்.