வந்துட்டாரய்யா...வந்துட்டாரு மீண்டும் கம்பேக் கொடுக்கும் வடிவேலு… ஆர் ஜே பாலாஜியுடன் கூட்டணி!

23 பிப்ரவரி 2021, 10:37 AM

ஆர் ஜே பாலாஜி மற்றும் வடிவேலு சேர்ந்து நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் சினிமாவில் தொடர்ச்சியாக நடிக்கவில்லை. அப்படி நடித்தாலும் அவர் படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடித்த இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படமும் பாதியிலேயே டிராப் ஆகியுள்ளது. இந்நிலையில் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத வடிவேலு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் இப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பல்வேறு துறையினர்கள் இருக்கும் ஒரு வாட்ஸ் ஆப் குழுவினர் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி என அது சொல்லப்படுகிறது.

அப்போது பேசிய வடிவேலு ‘நீங்ள் எல்லாம் ஒரு வருடமாகதான் லாக்டவுனில் இருக்கிறீர்கள். ஆனால் நானோ 10 வருடமாக இருக்கிறேன். என் உடம்பில் இப்போதும் தெம்பும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை.’ என பேசினாராம். அதே போல சோகத்தோடு கர்ணன் படத்தில் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் பாடியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வடிவேலு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் ஆர் ஜே பாலாஜியும் அவரும் சேர்ந்து நடிக்கும் ஒரு படத்தை எம்டன் மகன் இயக்குனர் திருமுருகன் இயக்க உள்ளாராம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.